Monday, 22 August 2022

ஒடிசாவின் கட்டாக் நகரில் பாரத் பென்ஸ் – ன் புதிய பிராந்திய பயிற்சி மையம்

 

ஆகஸ்ட் 22, 2022


·       நிறுவப்படுகின்ற பாரத்பென்ஸ் பிராந்திய பயிற்சி மையம் (RTC) கிழக்கு மண்டலத்தில் இதுவே முதலாவதாகும் மற்றும் இந்தியாவின் இரண்டாவது மையம் என்ற பெருமையை இது பெறுகிறது.

·       தென் மண்டலத்திற்கான பாரத்பென்ஸ் ஆர்டிசி சென்னையில் ஏற்கனவே நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.  நான்கு ஆண்டுகளில் 28,000 நபர்கள் இங்கு பயிற்சி பெற்றிருக்கின்றனர்

·       வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் 2022 டிசம்பருக்குள் கூடுதலாக இரண்டு பிராந்திய பயிற்சி மையங்கள் நிறுவப்படும்

சென்னை  டெய்ம்ளர் டிரக் ஏஜி (டெய்ம்ளர் டிரக்குழுமத்திற்கு முற்றிலும் சொந்தமானதுணை நிறுவனமான டெய்ம்ளர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (DICV), ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் ஒரு புதிய பாரத்பென்ஸ் பிராந்திய பயிற்சி மையத்தை (RTC) இன்று தொடங்கியிருக்கிறது.  பாரத்பென்ஸ்  ன் தொழில்நுட்பக் கல்வி இயக்ககப் பிரிவு மற்றும் பிபிஎஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு கூட்டாண்மை செயல்முயற்சியான இந்த புதிய ஆர்டிசிகட்டாக் நகரின் ஐடிஐ வளாகத்தில் அமைந்துள்ளது.  கட்டாக் ஐடிஐமாணவர்களுக்கு மட்டுமின்றிகிழக்கு பிராந்தியத்திலுள்ள பாரத்பென்ஸ் விற்பனை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சியளிப்பு திட்டங்களை இம்மையம் மேற்கொள்ளும்.

புதிய ஆர்டிசி மைய தொடக்கவிழா நிகழ்வில் ஒடிசா மாநிலத்தின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் திருபிரித்திரஞ்சன் கராய்ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திருசுப்ரதோ பக்‌ஷிதிறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப கல்வி துறையின் முதன்மைச் செயலர் திருஹேமந்த் ஷர்மா ஐஏஎஸ்தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் திருஜிரகு,  ஐஏஎஸ் பங்கேற்று சிறப்பித்தனர்.

தனது தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மறுபயிற்சி அளிக்கவும் மற்றும் அவர்களின் திறன்களை உயர்த்தவும்இந்தியா முழுவதிலும் பிராந்திய அளவிலான பயிற்சி மையங்களை பாரத்பென்ஸ் நிறுவி வருகிறது.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான முதல் மையம் சென்னையில் நிறுவப்பட்ட நிலையில் ஒடிசாவின் கட்டாக் நகரில்ஐடிஐ வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆர்டிசி இரண்டாவது மையமாகும்.  வருடாந்திர அடிப்படையில் அதிகபட்ச பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மையம் என இன்னும் இரண்டு ஆர்டிசிகளை பாரத்பென்ஸ் விரைவில் தொடங்கவிருக்கிறது

பாரத்பென்ஸ்  ன் சந்தையாக்கல் & விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை துறையின் துணைத்தலைவர் திருராஜாராம் கிருஷ்ணமூர்த்தி இதுபற்றி கூறியதாவதுகட்டாக்கில் பாரத்பென்ஸ் பிராந்திய பயிற்சி மையம் தொடங்கப்பட்டிருப்பதுஇந்தியாவின் வடக்குதெற்குகிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியம் ஒவ்வொன்றிலும் ஒரு பிராந்திய பயிற்சி மையத்தைக் கொண்டிருப்பது என்ற பாரத்பென்ஸ் அகாடமியின் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.  விற்பனையிலும் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை பிரிவிலும் பணிபுரிகின்ற எமது பணியாளர்கள்வாகன ஓட்டுனர்கள் மட்டுமன்றிமாணவர்களுக்கும் பயிற்சியளிக்கவும்மறுதிறன் வழங்கவும் மற்றும் திறன் மேம்பாட்டை மேற்கொள்ளவும் இம்மையம் திறம்பட செயல்படும்.  வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்திற்கான இன்னும் இரு பிராந்திய பயிற்சி மையங்களை நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன; 2022 டிசம்பர் மாதத்திற்குள் இம்மையங்கள் செயல்பாட்டிற்கு வரும்.  பாரத்பென்ஸ் அகாடமி கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற நிலையில் எமது சென்னை ஆர்டிசி மையத்தில் இதுவரை சுமார் 28000 தொழில்நுட்ப பணியாளர்களுக்கு நாங்கள் பயிற்சியளித்திருக்கிறோம்.  கட்டாக்கில் புதிய பிராந்திய பயிற்சி மையம் இப்போது தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், 800 டெக்னீஷின்களுக்கு நாங்கள் பயிற்சியளிக்கவிருக்கிறோம்.  கிழக்கு மண்டலத்தில் மட்டும் ஓராண்டுக்குள் 2000-க்கும் அதிகமான டெக்னீஷியன்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.  எமது பிராந்திய பயிற்சி மையங்கள் அனைத்திலும் சேர்த்துமொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 10000 டெக்னீஷியன்களுக்கு பயிற்சியை வழங்குவதே எமது நோக்கமாகும்.  

கட்டாக்கில் தொடங்கப்பட்டுள்ள பாரத்பென்ஸ் ஆர்டிசிஏறக்குறைய 2000 சதுரஅடி பரப்பளவில் தற்போது அமைந்துள்ளதுமிக விரைவில் இது 6000 சதுரஅடி பரப்பளவுள்ளதாக விரிவாக்கம் செய்யப்படும்.  கட்டாக் நகரில் அரசு தொழிலகப் பயிற்சி மையம் (ஐடிஐவளாகத்திற்குள்ளே இந்த ஆர்டிசி அமைந்திருக்கிறது.  500-க்கும் அதிகமான சாதனங்கள் மற்றும் கருவிகள், 2 வாகனங்கள் மற்றும் பயிற்சி திட்டங்களுக்கான 10 டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கான பாகங்களின் தொகுப்புகள் இம்மையத்தில் இடம்பெற்றிருக்கின்றன.  பாரத்பென்ஸ் டீலர் வலையமைப்பைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் ஐடிஐ (தொழிலகப் பயிற்சி கல்வி நிறுவனம்பயிற்றுனர்கள்இந்த ஆர்டிசியில் பல்வேறு வகையான தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை நடத்துவார்கள்

பாரத்பென்ஸ் அகாடமிதேசிய அளவிலான 275+ விற்பனை மற்றும் சர்வீஸ் தொடுமுனை அமைவிடங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு பயிற்சியை வழங்கி வருகிறதுஇதற்கும் கூடுதலாகபாரத்பென்ஸ் டிரக் ஓட்டுனர்கள் மற்றும் நாடெங்கிலும் உள்ள டீலர்ஷிப்களின் பணியாளர்களுக்கும் இந்த அகாடமி பயிற்சியளிக்கிறது.  பாரத்பென்ஸ் தொழில்நுட்ப பயிற்சியானதுடீலர்ஷிப்களின் அமைவிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய நாடெங்கிலும் தனது பயிற்சியளிப்பு வசதிகளை பாரத்பென்ஸ் அகாடமி விரிவுபடுத்தி வருகிறது

தொழில்நுட்ப பணியாளர்களை உருவாக்குவதும்,  திறன் விளைவுகளை அளவீடு செய்வதும்செயற்பரப்புகளை விரிவாக்குவதும்செயற்பணிகளை டிஜிட்டல்மயமாக்குவதும்சான்றிதழ்களை வழங்குவதும் மற்றும் இறுதிப் பயனாளிக்கு ஆலோசனைகளைத் தருவதும் பாரத்பென்ஸ் அகாடமியின் செயல்நோக்கமாக இருக்கிறது.  உள்ளூர் மொழியிலேயே பயிற்சித் திட்டங்களை கையாள்வதற்கு களஅளவிலான மற்றும் டீலர் அளவிலான பயிற்சியாளர்களையும் இது உருவாக்குகிறது.  நேரத்தையும்செலவையும் இது மிச்சப்படுத்துவதோடுதிறன்மிக்கப் பணியாளர்கள் கிடைப்பதையும் மற்றும் திறனளவையும் இது மேம்படுத்துகிறது

ஓட்டுனருக்குப் பயிற்சியளிப்பதற்கான சிமுலேட்டர்  மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பை உருவாக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் முன்னேற்றத்தை எட்டுவதற்காக டிஜிட்டல் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் மற்றும் இறுதிநிலை வரை செயல்திறனை கண்காணிக்கவும் இது உதவும்.  சிறப்பான செயல்திறனை எட்டவும் மற்றும் பிசினஸில் நல்ல விளைவுகளை அடையவும்இறுதிப் பயனாளிகளுக்கு வழிகாட்டவும் மற்றும் உதவவும் செய்கின்ற வாடிக்கையாளரை அடிப்படையாக கொண்ட பயன்பாடுகருப்பொருள் ஆகியவற்றின் மீது புதிய கல்வி<

No comments:

Post a Comment