Friday, 5 June 2020

Ola resumes operations in Chennai; Reinforces safety measures for drivers and customers

சென்னையில் ஓலா தனது செயல்பாடுகளை மீண்டும் துவக்கியுள்ளதுஓட்டுனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தியுள்ளது
சென்னை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள்தற்போது தங்களது பல்வேறு தேவைகளுக்காகமாநில அரசின் புதிய வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு கேப்கள் மற்றும் ஆட்டோக்களை புக் செய்யலாம்
சென்னை, 5 ஜுன், 2020 : தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றிஇந்தியாவின் முன்னணி மொபிலிட்டி அடித்தளமாகவும் மற்றும் உலகின் மிகப்பெரிய ரைடு – ஹெய்லிங் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழும் ஓலாஅதன் அனைத்து வாகனங்களிலும்உச்சபட்ச பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்சென்னையில் அதன் சேவைகளை மீண்டும் துவக்கியுள்ளது. இதற்கு முன்பாககோயம்புத்தூர்மதுரைதிருச்சி மற்றும் சேலம் ஆகிய தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் ஓலா அதன் சேவைகளை மறு துவக்கம் செய்தது. விமானநிலையம் மற்றும் சென்னை நகரின் பிற முக்கியப் பகுதிகளுக்கு சென்று வரகுடிமக்கள் தற்போது ஆட்டோக்கள் மற்றும் கேப்களை புக் செய்யலாம்.
ஓலாவின் பாதகாப்பிற்கு – முன்னுரிமை அணுகுமுறையை வலுப்படுத்தும் வகையில்ஒவ்வொரு பயணத்தின் போதும்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் உச்சபட்ச தரநிலைகளைப் பராமரிக்கும் வகையில்ஓலா ஒரு 5 அடுக்கு பாதுகாப்பினை அறிமுகம் செய்துள்ளது. இதில்ஓட்டுனர்-கூட்டாளிகளுக்கான முகக்கவசத்தின் கட்டாய அணிதல்பயணங்களுக்கு முன்பும் மற்றும் பின்பும் கார்களை ஆழமாக தொற்றுநீக்கம் செய்தல்பயணிகள் அவர்களது லக்கேஜ்களை தாங்களாகவே லோடிங் மற்றும் அன்லோடிங் செய்ய வலியுறுத்துதல்ரொக்கமில்லா பேமெண்ட்களை ஊக்குவித்தல் போன்றவைகள் அதில் உட்பட்டுள்ளன. பயணிகள் அல்லது ஓட்டுனர்-கூட்டாளி என இரு தரப்பில் எவர் விதிகளை பின்பற்றவில்லை அல்லது முகக்கவசம் அணியவில்லை என்றாலும்அந்த ரைடை ரத்து செய்வதற்கான ஒரு நெகிழ்வுதன்மை மிக்க ரத்துக் கொள்கையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடித்தளத்திலுள்ள அனைத்து வாகனங்களும்ஒவ்வொரு பயணத்திற்கு முன்புசுத்திகரிப்பு மற்றும் தொற்று நீக்கம் செய்யப்படுவது உட்பட்ட அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளையும் பின்பற்றுவதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும்ஒவ்வொரு 48 மணி நேரங்களுக்கும் ஒரு முறைவாகனங்கள் புகைமூட்டமும் செய்யப்படும்.
ஓலாவின் தெய்தித்தொடர்பாளர் மற்றும் தகவல்தொடர்புகள் தலைவர் திரு.ஆனந்த் சுப்ரமணியன் அவர்கள்தமிழக மாநில அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களின் படிசென்னையில்ஓலா அடித்தளத்தில் மூன்று மற்றும் நான்கு-சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள்உச்சபட்ச பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன்ஓலா ஆப்பில்குடிமக்களின் இடப்பெயர்வு தேவைப்பாடுகளை ஈடேற்றும் வகையில் கிடைக்கப்பெறுவர். மேலும் இதுகுடிமக்களுக்கு சேவையாற்றுவதில் தங்களது வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஓட்டுனர்-கூட்டாளிகளுக்கும் பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது” என்று கூறினார்.
எங்களது ஓட்டுனர்-கூட்டாளிகள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குதை ஏதுவாக்கும் உறுதிப்பாடுதற்போது ஓலா அதன் செயல்பாடுகளை மீண்டும் துவக்கியுள்ள 180 – க்கும் மேற்பட்ட நகரங்களில் பின்பற்றும் “5 அடுக்கு பாதுகாப்பு” முன்முயற்சியின் வழியாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதில்ஓட்டுனர்-கூட்டாளிகள் மற்றும் பயணிகளை கட்டாயமான முகக்கவசம் அணியச்செய்தல்பயணங்களுக்குப்-பின்பு கார்களை முழுமையாகத் தொற்று நீக்கம் செய்தல்ஒரு பயணத்திற்கு இரண்டு பயணிகளை மட்டுமே அனுமதிப்பதன் வழியாக சமூக இடைவெளி வரையறைகளுக்கு இணங்கி நடத்தல் ஆகியவைகள் இதில் உட்பட்டுள்ளன.
மாநில அரசின் வழிகாட்டுதல்களின் படிஓலா கேப்கள் ஒரு ஓட்டுனர் மற்றும் மூன்று பயணிகள் வரையிலும் மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து இரண்டு பயணிகள் வரையிலும் அனுமதிக்கப்படுவர். ஓலா இயங்கும் நகரங்களின் முழுமையான பட்டியல் இங்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் தொடர்ந்து நிகழ்நிலைபடுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

2 comments: