Monday, 20 June 2022

Apollo Hospitals enters into a partnership with Imperial Hospital, Bangladesh for Operations and Management of the 375 bed hospital , providing a ray of hope to over 166 million people

 Photo Caption: From Left to Right

Mr Harshad Reddy, Director Operations, Apollo Proton Cancer Centre

Mr Dinesh Madhavan, President Group Oncology and International, Apollo Hospitals,

Dr Prathap C Reddy, Founder & Chairman, Apollo Hospitals,

Prof. Dr Rabiul Husain, Chairman, Imperial Hospital Ltd, and

Mr Mohammed Abdul Malek, Board Member, Imperial Hospital Ltd, Bangladesh.

செய்தி வெளியீடு

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்!
375 படுக்கை வசதியுள்ள இம்மருத்துவமனையின் இயக்க செயல்பாடுகள்  மற்றும் மேலாண்மைக்கான இவ்வொப்பந்தம் 166 மில்லியன் நபர்களுக்கு பயனளிக்கும்

இந்தியாசென்னைஜுன் 20, 2022: ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல சேவைகள் வழங்கலில் ஆசியாவின் முதன்மையான மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்உலகத்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்குமாறு செய்வதற்கு பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் லிமிடெட் (IHL) உடன் கைகோர்த்திருக்கிறது.  பங்களாதேஷில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் செயலிருப்பை இப்புதிய கூட்டாண்மை இன்னும் வலுப்படுத்தும்.  பங்களாதேஷின் ஒரு முக்கிய நகரமான சிட்டகாங் – ல் இயங்கி வரும் 375 படுக்கை வசதி கொண்ட பன்முக சிறப்புப்பிரிவுகள் கொண்ட IHL மருத்துவமனையை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் இனி நிர்வகிக்கும்

சர்வதேச தரத்தில் உடல்நல பராமரிப்பு சேவைகளை அனைத்து நபர்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டுமென்ற தனது செயல்திட்டத்தின் அடிப்படையில்பிராண்டு உரிமம்இயக்கக்செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை (BOMA) ஒப்பந்தத்தில் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் மற்றும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் – ம் கையெழுத்திட்டிருக்கின்றன.  

சிட்டகாங் நகரில் அமைந்துள்ள இந்த நவீன மருத்துவமனைநோயாளிகளுக்கு மிகச்சிறப்பான சேவையளிக்கும் நோக்கத்தோடு அனுபவம் மிக்க மருத்துவப் பணியாளர்கள்மருத்துவர்கள்தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியாளர்களைக் கொண்டிருக்கும்.  பல தசாப்தங்களாக நேர்த்தியாக்கப்பட்டிருக்கும் இவர்களது மருத்துவ மற்றும் நிர்வாகத் திறன்களைப் பயன்படுத்தி இம்மருத்துவமனையின் தினசரி செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சை சேவைகள் சேவைகள் செயல்பாட்டை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வகிக்கும்.  உலகின் மிகச்சிறந்த சிகிச்சைப் பலன்களுக்கு நிகராக உயர் சிகிச்சை வாய்ப்புகள்பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எடுக்கும்.  அப்போலோ இம்பீரியல் ஹாஸ்பிட்டல் என அழைக்கப்படும் இம்மருத்துவமனைக்கு வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகள் கிடைக்கவும் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுவினர் உரிய காலஅளவுகளில் மருத்துவ மற்றும் தரநிலைக்கான ஆய்வுகளை மேற்கொள்வார்கள்

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் இந்தியா – ன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்பிரதாப் சிரெட்டிஇக்கூட்டாண்மை செயல்பாட்டை அறிவித்து பேசியதாவது: “உலகெங்கிலும் உடல்நலத் துறையில் நேர்மறை மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் மற்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு எமது மருத்துவ சேவை சென்றடைய வேண்டுமென்று எமது தொலைநோக்கு குறிக்கோளின் அடிப்படையில் பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் லிமிடெட் உடன் இந்த ஒத்துழைப்பை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.  சிட்டகாங்கில் அமைந்துள்ள அவர்களது மருத்துவமனையின் மேலாண்மையில் எமது மிக நேர்த்தியான நிபுணத்துவத்தையும்அனுபவத்தையும் வழங்குவதே இதன் நோக்கம்.  பங்களாதேஷ் நாட்டில் இம்மருத்துவமனையின் செயல்பாட்டை இன்னும் வலுப்படுத்தவும் மற்றும் உறுதியான நம்பிக்கையை கட்டமைப்பதன் மூலம் நோயாளிகளுக்கு ஒரு வலுவான மருத்துவக் குழுவை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.  நோயாளிகளின் நலனை உறுதி செய்வதும் மற்றும் அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான சூழலமைப்பை உருவாக்குவதும் பங்களாதேஷின் அப்போலோ – இம்பீரியல் ஹாஸ்பிட்டலின் முதல் பொறுப்பாக இருக்கும்.”

No comments:

Post a Comment