Blurb: FRHS India’s study conducted among chemist in 6 states finds MA drugs negligible stocking of MA drugs in 5 out of 6 states.
Chennai,August10, 2020:A study conducted by Foundation for Reproductive Health Services India (FRHSI), among 1500 chemists in six states indicatesan overwhelming shortage of the drugs in five out of the six states surveyedwith abysmal stocking in Madhya Pradesh (6.5%), Punjab (1.0%), Tamil Nadu (2.0%), Haryana (2.0%), and Delhi (34.0%). The only state that seems to be better isAssam (69.6%).
S.No. |
State |
% of chemists stocking MA Drugs |
1.
|
Punjab |
1.0% |
2.
|
Haryana |
2.0% |
3.
|
Tamil Nadu |
2.0% |
4.
|
Madhya Pradesh |
6.5% |
5.
|
Delhi |
34.0% |
6.
|
Assam |
69.6% |
The non-stocking
of MA drugs seems to be linked with overregulation by drug control authorities.
About 79% of chemists no longer stock MA drugs to avoid legal issues and
excessive documentation requirements. 54.8% of chemists also report that MA
drugs are overregulated as compared to other schedule H drugs.Even in Assam
which has the highest stocking percentage, 58% chemists report overregulation
of MA drugs. State wise, regulatory/legal barriers continues to be the major
reason for not stocking MA drugs, with 63% chemists in Haryana, 40% in Madhya
Pradesh, 74% in Punjab and 79% in Tamil Nadu reporting so.
Commenting on the launch of the report, Mr. VS Chandrashekar, Chief Executive Officer, Foundation for Reproductive Health Services India and Pratigya Campaign Advisory Group membersaid,“Medical Abortion has increasingly becomethe preferred method to terminate a pregnancy in India and the non-availability of drugs is threatening women's access to safe abortion.Evidence shows MA drugs are a safe and effective means to terminate a pregnancy, their non-availability can potentially reverse the gains made by the country in reducing unsafe abortions, maternal mortality and morbidity.”
While the purpose of the study was to verify the availability of MA drugs, the findings also reveal that Emergency Contraceptive Pills (ECP)are not being stocked by chemists in the state of Tamil Nadu. Only 3% of the chemists surveyed in the state reported stocking ECPs and 90% not stocking shared that the pills are banned in the state. Emergency Contraceptive Pills are non-prescription drugs and are also stocked and distributed by ASHAs under the National Family Planning Program. Not allowing chemists to stock ECP denies women of Tamil Nadu a safe and easy to use contraceptive choice.
The primary reason for non-availability of MA drugs seems to be the incorrect understanding that MA combipacks can be used for gender biased sex selection among regulatory officials. MA combipack is indicated for use only upto nine weeks while an ultra sound can detect the sex of the fetusat 13-14 weeks gestation. Hearteningly chemists do not seem to share this misconception, only about 10% chemists across the study states reported that MA drugs can be used for sex-selective termination of pregnancy.In Tamil Nadu however, 36% have this misunderstanding.
“In these unprecedented times when movement of people is restricted and access to medical facilities is limited, there is an urgent need to ensure easy availability of medical abortion drugs at pharmacies by removing unnecessary barriers on their sale. The Ministry of Health and Family Welfare should clarify that MA drugs which are approved for use up to nine weeks in India cannot be used for sex selective termination of pregnancy. This will allow women to seek medical support and access drugs with a prescription,”said Dr RashmiArdey, Clinical Services Director, FRHS India
Scrutiny and over-regulation, leading to non-availability of MA drugs is a major cause of concern and is likely to result in millions of women being denied access to a safe abortion method. WHO in 2019, included MA drugs in its Core List of Essential Medicines, removing an earlier advisory which required medical supervision while taking the drugs. Removing unnecessary barriers in stocking of MA drugs will ensure that women are able to access the method of their choice. “Medical Abortion has reduced the cost of early abortion care considerably making it easily accessible for women. In COVID times, many providers have started asking for a COVID 19 test before carrying out a surgical abortion, which can further increases the cost of service for women. MA in comparison is cheaper as it does not require a clinical set up. Non availability of MA will push women to seek surgical abortion which can be cost intensive and can further widen the access gaps,” said Debanjana Choudhuri, Senior Manager-Partnerships, FRHS India.
The study recommends addressing misconceptions regarding MA and Gender-Biased Sex-Selection; harmonising Central Drugs Standard Control Organisation approvals/requirements and the MTP Act; amending MTP Rules to allow MBBS Doctors to prescribe MA Drugsincreasing investments in Safe Abortion Communication through and providing support to women who access MA Drugs by setting up toll-free helpline numbers.
Link of the detailed study: https://bit.ly/2DTR6Sb
About Foundation for Reproductive
Health Services India
Foundation for Reproductive Health Services India is a
leading Indian Non-Governmental Organization working since 2009 to enable women
and girls to exercise their reproductive rights and choice. FRHS India is
India’s No. 1 provider of clinical family planning services in the NGO and the
private sector. Through public-private partnerships with the state governments
of Rajasthan, Bihar and Uttar Pradesh, FRHS India works towards improvement in
accessibility and availability of quality family planning services in the
states. In 2019, FRHS India served 1,40,344 clients with sterilization, 20,093
clients with IUCD and offered safe abortion services to 824 clients. FRHS India
also provided information and counselled 1, 82, 513 clients in 2019 and
prevented 82,464 unintended pregnancies, averted 29,406 unsafe abortions and 64
maternal deaths.
ஐந்து மாநிலங்களில் மருத்துவரீதியான கருக்கலைப்பு மாத்திரைகளின் வருந்தத்தக்க பற்றாக்குறை; இனப்பெருக்க நலச் சேவைகள் இந்தியா அறக்கட்டளையின் ஆய்வு கண்டறிந்துள்ளது
குறிப்பு: எப்.ஆர்.எச்.எஸ் இந்தியா 6 மாநிலங்களில் இந்த ஆய்வை நடத்தியது, இதில் 5 மாநிலங்கள் எம்.ஏ மருந்துகளைப் போதியளவு இருப்பு வைப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது
சென்னை, ஆகஸ்ட்10, 2020: போபால்| சண்டிகர்| சென்னை| புது தில்லி| கவுகாத்தி இனப்பெருக்க நலச் சேவைகள் இந்தியா அறக்கட்டளையினால் (எப்.ஆர்.எச்.எஸ்.ஐ)ஆறு மாநிலங்களில் 1500 மருந்துக்கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு, கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆறு மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள், மத்தியப்பிரதேசம்(6.5%), பஞ்சாப் (1.0%), தமிழ்நாடு (2.0%), ஹரியானா (2.0%), தில்லி (34.0%)ஆகியன மிகமோசமான இருப்புநிலையுடன் பெருமளவு பற்றாக்குறையைக் கொண்டுள்ளன எனச் சுட்டிக்காட்டுகிறது.சிறப்பாகத் தெரியும் ஒரே மாநிலம் அசாம்(69.6%)மட்டுமே ஆகும்.
வ.எண். | மாநிலம் | எம்.ஏ மருந்துகளை இருப்பு வைத்திருக்கும் மருந்துக்கடைக்காரர்கள்% |
1. | பஞ்சாப் | 1.0% |
2. | ஹரியானா | 2.0% |
3. | தமிழ்நாடு | 2.0% |
4. | மத்தியப் பிரதேசம் | 6.5% |
5. | தில்லி | 34.0% |
6. | அசாம் | 69.6% |
எம்.ஏ மருந்துகளை இருப்பு வைக்காமை மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அதிகப்படியான கட்டுப்பாடுகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. 79% மருந்துக்கடைக்காரர்கள் சட்டச் சிக்கல்கள், அதிகப்படியான ஆவணத் தேவைகளைத் தவிர்ப்பதற்காக எம்.ஏ மருந்துகளை இருப்பு வைப்பதில்லை.பிற அட்டவணை எச் (H) மருந்துகளுடன் ஒப்பிடும்போது எம்.ஏ மருந்துகள் அதிகக் கட்டுப்பாடுகள் கொண்டுள்ளதாக 54.8% மருந்துக்கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.அதிக இருப்பு சதவீதம் கொண்டுள்ள அசாமில் கூட ஏம்.ஏ மருந்துகளின் அதிகப்படியான கட்டுப்பாடுகள் குறித்து 58% மருந்துக்கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். மாநில வாரியாகஹரியானாவில் 63%, மத்தியப்பிரதேசத்தில் 40%, பஞ்சாபில் 74%,தமிழ்நாட்டில் 79% மருந்துக்கடைக்காரர்கள் எம்.ஏ மருந்துகளை இருப்பு வைக்காததற்கு தொடரும் ஒழுங்குமுறை/சட்டத் தடைகளைக் காரணமாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த அறிக்கை வெளியீடு குறித்து கருத்துத் தெரிவித்த,திரு. VS சந்திரசேகர், தலைமை செயல் அதிகாரி, இனப்பெருக்க நலச் சேவைகள் இந்தியா அறக்கட்டளை மற்றும் பிரதிக்யா பரப்புரை ஆலோசனைக் குழு உறுப்பினர், “மருத்துவரீதியிலான கருக்கலைப்பு இந்தியாவில் அதிகம் விரும்பப்படும்கர்ப்பத்தைக் கலைக்கும் முறையாக மாறியுள்ளது, அதற்கான மருந்துகள் கிடைக்காமல் போவது பாதுகாப்பான கருக்கலைப்பிற்கான பெண்களின் அணுகலை அச்சுறுத்துகிறது.எம்.ஏ மருந்துகள் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான பாதுகாப்பான, செயல்திறமிக்க வழிமுறை என்பதைச் சான்றுகள் காட்டுகின்றன, அவை கிடைக்காமல் போவது பாதுகாப்பற்ற கருக்கலைப்பு, கருவுற்ற தாய்மார்கள் இறப்பு மற்றும் நோயுறுதல் விகித்தத்தைக் குறைப்பதில் நாடு அடைந்த முன்னேற்றத்தை தலைகீழாக மாற்றும் வாய்ப்புள்ளது”எனக் கூறினார்.
இந்த ஆய்வின் நோக்கம் எம்.ஏ மருந்துகளின் கிடைக்கும்தன்மையைச் சரிபார்ப்பது தான் என்றாலும், ஆய்வு முடிவுகள் தமிழ்நாட்டில் அவசரகால கருத்தடை மாத்திரைகள் (ஈ.சி.பி) மருந்துக்கடைக்காரர்களால் இருப்புவைக்கப்படுவதில்லை என்பதையும் வெளிப்படுத்துகின்றன.மாநிலத்தி
ஒழுங்குமுறை அதிகாரிகள் மத்தியில் நிலவும், எம்.ஏ வகைத்தொகுப்புகளை பாலினச் சார்புடைய பாலினத் தேர்விற்காகப் பயன்படுத்தலாம் என்ற தவறான புரிதலே எம்.ஏ மருந்துகள் கிடைக்காததற்கு முதன்மையான காரணமாகத் தெரிகிறது. எம்.ஏ மருந்துகள் ஒன்பது வாரங்கள் வரை மட்டுமே பயன்படுத்தக் குறிப்பிடப்பட்டுள்ளன அதேநேரம் கர்ப்பகாலத்தின் 13-14 வாரத்தில் தான் கருவின் பாலினத்தை மீயொலியால் (அல்ட்ராசவுண்ட்) கண்டறிய முடியும். நல்லவேளையாக மருந்துக்கடைக்காரர்கள் இந்தத் தவறான கருத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை அல்லது ஆய்வு மாநிலங்களில் 10% மருந்துக்கடைக்காரர்கள் மட்டுமே எம்.ஏ மருந்துகளை பாலினத் தெரிவிற்காகக் கர்ப்பத்தைக் கலைக்கப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தனர். எனினும் தமிழ்நாட்டில் 38% இந்தத் தவறான புரிதல் உள்ளது.
“இதுவரை இல்லாத வகையில் மக்களின் இயக்கம் தடைபட்டிருக்கும் மருத்துவ வசதிகளுக்கான அணுகல் வரம்பிடப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், மருத்துவரீதியான கருக்கலைப்பு மருந்துகளின் விற்பனைக்கான தேவையற்ற தடைகளை நீக்கப்பட்டு அவை மருந்துக்கடைகளில் எளிதில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்பது வாரங்கள் வரையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள எம்.ஏ மருந்துகளைப் பாலினத் தெரிவிற்காகக் கர்ப்பத்தைக் கலைக்கப் பயன்படுத்த இயலாது என்பதை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்.இது மருத்துவ உதவியை நாடவும் பரிந்துரையுடன் இம்மருந்துகளை அணுகவும் பெண்களை அனுமதிக்கும்,”என எப்.ஆர்.எச்.எஸ் இந்தியாவின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் மரு. ராஷ்மி அர்டி கூறினார்.
பரிசோதனைகளும் அதிகப்படியான கட்டுப்பாடுகளும் எம்.ஏ மருந்துகள் கிடைக்காமைக்கு வழிவகுக்கின்றன. இது மிகப்பெரிய கவலைக்குரிய விடயமாகவும் மில்லியன் கணக்கான பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முறைக்கு அணுகல் மறுக்கப்படவும் காரணமாக உள்ளது. 2019இல் உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ) எம்.ஏ மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது மருத்துவ மேற்பார்வை தேவை எனும் அதன் முந்தைய ஆலோசனையை நீக்கி இம்மருந்துகளை அதன் அத்தியாவசிய மருந்துகளுக்கான முக்கியப் பட்டியலில் சேர்த்தது. எம்.ஏ மருந்துகளை இருப்பு வைப்பதிலுள்ள தேவையற்ற தடைகளை நீக்குவது பெண்கள் தங்களுக்கு விருப்பமான முறையை அணுகுவதை உறுதி செய்கிறது. “மருத்துவரீதியான கருக்கலைப்பு ஆரம்பநிலை கருக்கலைப்புச் சிகிச்சைக்கான செலவைக் கணிசமான அளவு குறைத்து, பெண்களால் எளிதில் அணுகக்ககூடியதாக அதனை மாற்றியுள்ளது. இந்த கோவிட் காலங்களில், பெரும்பாலான வழங்குநர்கள் கருக்கலைப்பு அறுவைசிகிச்சை செய்வதற்கு முன் கோவிட் 19 பரிசோதனையைக் கேட்கத் தொடங்கியுள்ளனர், இது பெண்களுக்கான சேவைச் செலவுகளை இன்னும் அதிகரிக்கக்கூடும். ஒப்பீட்டளவில் எம்.ஏ மலிவானது ஏனெனில் இதற்கு மருத்துவமனை போன்ற அமைப்பு தேவையில்லை. எம்.ஏ கிடைக்காமல் போவது பெண்களை கருக்கலைப்பு அறுவைசிகிச்சைகளை நாடுவதற்குத் தள்ளும், இது செலவு மிகுந்ததாகவும் அணுகல் இடைவெளிகளை இன்னும் அதிகரிக்கவும் கூடும்,” என எப்.ஆர்.எச்.எஸ் இந்தியாவின் மூத்த மேலாளர் – பார்ட்னர்ஷிப், டெபஞ்சனா சவுத்ரி கூறினார்.
மேலும் இந்த ஆய்வு, எம்.ஏ மற்றும் பாலினச் சார்புடைய பாலினத் தேர்வு தொடர்பான தவறான கருத்துகளைத் தெளிவுபடுத்துதல்; மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்புதல்/ எம்.டி.பி சட்டத் தேவைகளை இசைவாக்குதல்; எம்.பி.பி.எஸ் மருத்துவர்களும் எம்.ஏ மருந்துகளைப் பரிந்துரைப்பதற்காக எம்.டி.பி விதிகளைத் திருத்துதல்; எம்.ஏ வகைத் தொகுப்புகளை மருந்துகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் சட்டத்தின் அட்டவணை கேயின் கீழ் வகைப்படுத்தக் கருதுதல்; ஐ.ஈ.சி மற்றும் ஊடகப் பரப்புரைகள் வழியாக பாதுகாப்பான கருக்கலைப்பு தகவல்தொடர்புகளில் முதலீடுகளை அதிகரித்தல்; மற்றும் கட்டணமில்லா உதவி எண்களை அமைப்பதின் மூலம் எம்.ஏ மருந்துகளை அணுகும் பெண்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறது
Link of the detailed study: https://bit.ly/2DTR6Sb
No comments:
Post a Comment